திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி பெய்து வந்த நிலையில், குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் பெய்து வந்த தொடர் கனமழையால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா, தாளடி பயிர்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
இந்நிலையில் பாதிக்கப்பட்டப் பகுதிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
விவசாயிகள் விஷயத்தில் மெளனம் சாதிக்கும் மத்திய அரசு
பின்னர் அதனைத்தொடர்ந்து மத்தியக் குழுவினர் ஆய்வு செய்து விட்டு, அதனை குறித்து மத்திய அரசிடம் சமர்ப்பித்து உடனடியாக நிவாரணத் தொகை அறிவிக்கப்படும் என அக்குழுவினர் கூறிச்சென்றுள்ளனர்.
ஆனால், தற்போது வரை எந்த ஒரு நிவாரணத்தையும் தமிழ்நாட்டிற்கு கொடுக்காமல், மத்திய அரசு மௌனம் சாதித்து வருவதாக விவசாயிகள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: 'நெற்றியில் பட்டை அடித்துக்கொண்டால் சேகர்பாபுவின் பழைய வரலாறு மறந்துவிடுமா?'