ETV Bharat / state

'பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 31 வரை அனுமதி வழங்க வேண்டும்' - பி.ஆர். பாண்டியன் - Report by PR Pandian

திருவாரூர்: பயிர் காப்பீடு செய்வதற்கு நவம்பர் 31 வரையிலும் அனுமதி வழங்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

http://10.10.50.85//tamil-nadu/24-November-2020/tn-tvr-03-insurence-date-exten-pr-pandian-script-tn10029_24112020171706_2411f_1606218426_539.jpg

author img

By

Published : Nov 24, 2020, 6:40 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில், நிவர் புயலால் தென்னை மரங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கக் கூடும் என்கிற எச்சரிக்கை வந்திருக்கிறது. காப்பீடு செய்வதற்கு நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை கூறி தட்டிக் கழிக்கும் நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். தற்போது காப்பீடு செய்தாலும் பெறும் மழையோ புயல் காற்றினால் பாதிக்கப்பட்டால் இழப்பீடு பெற முடியாது என்று கை விரிக்கிறது.

இதை தமிழ்நாடு அரசு, மத்திய அரசோடு பேசி தீர்வு காண முன் வரவேண்டும். நெல் பயிரிட்ட விவசாயிகளுக்கு காப்பீடு செய்வதற்கு மத்திய, மாநில அரசுகளுடைய நடவடிக்கைகளால் காலம் கடந்து விட்டது. குறிப்பாக பயிர் காப்பீட்டு நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை டெண்டர் மூலம் தான் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கத்தில் தான் இப்கோ டோக்தியோ என்ற நிறுவனத்திற்கு காப்பீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் கடன் கொடுக்கும் அதிகாரத்தை ரத்து செய்ததால், மத்திய கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் விவசாயிகளுக்கு மட்டும் வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அவர்களுக்கான பிரீமியம் மட்டும் பெறப்பட்டுள்ளது. கடன் பெறாத விவசாயிகளுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் பிரீமியம் பெற மறுத்து விட்டன. இதனால், 80 விழுக்காடு விவசாயிகள் உரிய காலத்தில் பிரீமியம் செலுத்த முடியாமல், தனியார் இணையதள நிறுவனங்களில் குவிந்து காத்துள்ளனர்.

அவ்வப்போது மின்சார தட்டுப்பாடு ஏற்படுவதாலும் கணினியில் ஒரே நேரத்தில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காப்பீடு செய்வதற்கு இயலாத நிலை உள்ளதால் விவசாயிகள் தவிக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் நவம்பர் 31 வரையிலும் பிரீமியம் செலுத்துவதற்கு கால அவகாசம் இருந்தும், 24ஆம் தேதி நிவர் புயல் தாக்கம் தொடங்குவதற்கு முன் பிரீமியம் செலுத்தினால் தான் நிவர் புயலில் இழப்பீடு பெற முடியும் இல்லையேல் இழப்பீடு கிடைக்காது என்று மிரட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது.

சாகுபடி பயிர்களுக்கான இழப்பீடு என்பது அறுவடை ஆய்வறிக்கையின் படி பிப்ரவரி மாதங்களில் மேற்கொள்கிற நிலையில் தற்போது இழப்பீடு உண்டா இல்லையா என்ற நிலைக்கு செல்வது என்பது விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும். எனவே, பிரீமியம் செலுத்துவதற்காக அங்கீகரிக்கப்பட்ட காலக்கெடு வரையிலும் பிரீமியம் செலுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மேலும் இணைய தளங்களில் காலதாமதத்தை போக்கி கையால் எழுதி கொடுக்கப்படுகிற அத்தாட்சி அடிப்படையில் பிரீமிய தொகை அவசர காலத்தில் செலுத்துவதற்கான நடைமுறையும் அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: நிவர் புயல் மின்சார வாரியத் தொடர்பு எண்கள் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.