ETV Bharat / state

திருப்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்! - Tirupur veterinary hospital news

திருப்பூர்: கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல்லை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாட்டி வைத்தார்.

திருப்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

author img

By

Published : Nov 6, 2020, 7:45 PM IST

திருப்பூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, மாவட்ட தொழில் மையம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 5,592 பயனாளிகளுக்கு 66 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரத்து 822 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மேலும், முடிவுற்ற பணிகளான கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கட்டப்பட்ட ஆய்வுக்கூடம் திருப்பூர் மாநகராட்சியில் இரண்டாம் மண்டல அலுவலக கட்டடம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம், மீன் வள மேம்பாட்டு துறை உள்ளிட்ட 8 துறைகளின் சார்பில் 31 கோடியே 68 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

திருப்பூர் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!

இதனையடுத்து புதிதாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உடுமலை வட்டம் பண்ணை கிணறு கிராமத்தில் 82 கோடியே 11 லட்சம் மதிப்பீட்டில் அமையவுள்ள கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் உடன் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார்.

இதையும் படிங்க...திருப்பூரில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.