புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 18 நாள்களைக் கடந்து போராட்டம் நடத்திவருகின்றனர். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகத் தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளும், அனைத்து விவசாய சங்கங்களும் பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு அனைத்துக் கட்சியினர் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது என்றும் உடனே திரும்பப் பெற வலியுறுத்தியும் மாபெரும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் டெல்லியில் போராடும் விவசாயிகளை அழைத்து சுமுகமான பேச்சுவார்த்தை நடத்துவதோடு, அவர்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வேளாண் சட்டத்தை ரத்து செய்யக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் மதிமுக, திமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, விசிக, விவசாய சங்கம் உள்ளிட்டவற்றின் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: கோவையில் 2ஆவது நாளாக விவசாயிகள் சங்கத்தினர் காத்திருப்புப் போராட்டம்!