திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு ரூ.11.98 கோடி மதிப்பிலான திருமண நிதியுதவியுடன் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாடு மக்களின் பொருளாதாரத்தை முக்கிய குறிக்கோளாக கொண்டு பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்திவரும் முதலமைச்சர் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க உத்தரவிட்டுள்ளார்கள்.
அந்த வகையில், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் திருமண நிதியுதவியுடன் கூடிய தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 1,551 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியாக ரூ.5.97 கோடியும், ரூ.5 கோடியே 97 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான தாலிக்கு தங்கம் 75 பேருக்கு இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டது.
அதேப்போல், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு அடையாள அட்டையுடன் கோவிட்-19 முதற்கட்ட நிவாரண தொகையாக 7 பயனாளிகளுக்கு ரூ.2000 உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்நிகழ்வில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கலைவாணன், அரசு அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பள்ளி, கல்லூரிகள் திறப்பு எப்போது?