ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் நடக்க அதிமுகவே காரணம் - ஜி.கே. வாசன் கருத்து - Thiruvarur District News

திருவாரூர்: தமிழ்நாட்டில் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்க காரணமே அதிமுகதான் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

ஜி. கே வாசன்
author img

By

Published : Nov 4, 2019, 7:42 AM IST

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "காவிரி டெல்டா விவசாயிகளின் நல்வாழ்விற்கு உறுதி அளிக்கும் விதமாக கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை ஒருபோதும் கட்டக்கூடாது. மத்திய அரசு அதற்கான அனுமதியை கொடுக்கக்கூடாது. பாலியல் பிரச்னைகளில் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியின் கீழ் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்கள் மீது தேவையற்ற செயல்களில் தவறான முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதுபோன்ற நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்பதுதான் அனைவருடைய எண்ணமும். அதன் அடிப்படையிலேயேதான் தமிழ்நாடு அரசும் செயல்பட்டுவருவதாக நான் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் போட்ட வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அதிமுகவின் முயற்சியால்தான் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளிவந்த பிறகு அதிமுக கூட்டணியின் சார்பாக முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்" என்றார்.

ஜி.கே. வாசன் பேட்டி

பிரதமர் தமிழை முன்னெடுக்க காரணம் குறித்த கேள்விக்கு, பிரதமர் மோடி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சொந்தக்காரர். எனவே எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவர் சரியாக கொடுத்துக் கொண்டிருப்பதாக பதிலளித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒருசேர முன்னேற வேண்டும், வளர வேண்டும் என்ற ரீதியில் மத்திய பாஜக அரசு செயல்படுவதாக குறிப்பிட்ட அவர், இருப்பினும் பிரதமர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அது தமிழுக்கு தமிழ்நாட்டிற்குப் பெருமை உலக தமிழர்களுக்கு பெருமை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.

இதையும் படிங்க:உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பெயர் திருத்த கால அவகாசம் நீட்டிப்பு!

Intro:Body:தமிழகத்தில் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்க காரணமே அதிமுக தான், என திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் பேட்டி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்ததாவது...

காவிரி டெல்டா விவசாயிகளின் நல்வாழ்விற்கு உறுதி அளிக்கும் விதமாக கர்நாடக அரசு மேகதாதுவில் அணையை ஒருபோதும் கட்டக்கூடாது, மத்திய அரசு அதற்கான அனுமதியை கொடுக்கக்கூடாது என தமாகா சார்பில் வலியுறுத்தியுள்ளார். மேலும் பாலியல் பிரச்சனைகளில் தவறு செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. தற்போது நடைபெற்று வரும் ஆட்சியின் கீழ் பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பெண்கள் மீது தேவையற்ற செயல்களில் தவறான முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற நபர்களுக்கு உச்சபட்ச தண்டனை கிடைக்க வேண்டும் என்பது தான் அனைவருடைய எண்ணமும். அதன் அடிப்படையிலேயே தான் தமிழக அரசும் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகம் போட்ட வழக்கின் அடிப்படையில்தான் இதுவரை தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை. அதிமுக- வின் முயற்சியால் தான் இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சித் தேர்தல் தமிழகத்தில் நடைபெற உள்ளது. உள்ளாட்சி தேர்தல் குறித்து அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளி வந்த பிறகு அதிமுக கூட்டணியின் சார்பாக முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்.

பிரதமர் தமிழை முன்னெடுக்க காரணம் குறித்த கேள்விக்கு,
பாரதப் பிரதமர் அவர்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் சொந்தக்காரர். எனவே எல்லா மாநிலங்களுக்கும் கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அவர் சரியாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஒருசேர முன்னேற வேண்டும் வளர வேண்டும் என்ற ரீதியில் மத்திய பாஜக அரசு செயல்படுகிறது. இருப்பினும் பாரதப்பிரதமர் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்றால் அது தமிழுக்குப் பெருமை, தமிழகத்திற்கு பெருமை, உலக தமிழர்களுக்கு பெருமை என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது என்றார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.