திருவாரூரில் நேற்று மாலை குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து திருவாரூர் நகரில் துர்காலயா ரோடு, வ.உ.சி தெரு, கமலாம்பாள் நகர், அவ்வை நகர், அண்ணா நகர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்களுக்கு திடீர் வாந்தி, பேதி ஏற்பட்டது.
இவர்களை உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. சிலருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நகராட்சி குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருகிறது என்றும்; இந்தத் தண்ணீரை குடித்ததால்தான் பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் உடனடியாக கழிவு நீர் கலப்பதைத் தடுத்து நிறுத்தி, சுகாதாரமான குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில், உள்ள குடிநீர் குழாய்களை நகராட்சி ஆணையர் சங்கரன் நேரில் சென்று ஆய்வுசெய்தார்.
அதன் பின்னர் குழாய்களில் குளோரின் பவுடர் கொட்டப்பட்டு அடைப்பு சரி செய்யப்பட்டது. இதன் பின்னர் நேற்று மாலை வழங்கப்பட்ட குடிநீரை ஆய்வு செய்ய இருப்பதாகவும் நகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க... குடிநீருடன் கழிவுநீர்... 50-க்கும் மேற்பட்டோருக்கு திடீர் வாந்தி, பேதி: ஆபத்தான நிலையில் 8 பேர்!