ETV Bharat / state

'நான் வெற்றிபெற்றதற்கு இவர்கள்தான் காரணம்..!' - பூண்டி கலைவாணன் - சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகம்

திருவாரூர்: "தேர்தலில் நான் வெற்றிபெறுவதற்கு சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள்தான் காரணம்" என்று, திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் தெரிவித்துள்ளார்.

பூண்டி கலைவாணன்
author img

By

Published : Jun 7, 2019, 7:07 PM IST

திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் 64,751 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து திருவாரூர் சட்டமன்றத் தொகுதி மக்களுக்கு அவர் தொடர்ந்து நன்றி தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம், திருவாரூரில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய அவர், "நான் இந்த தொகுதியில் வெற்றி பெற மாட்டேன் என்றும், எனக்கு சில சமுதாய மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் சிலர் கூறினர். ஆனால் இன்று நான் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு காரணமே சிறுபான்மை மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள்தான்" என்றார்.

பின்னர், திருவாரூர் சட்டப்பேரவை தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Intro:நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்களே என கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சு.

Body:நான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு காரணம் தாழ்த்தப்பட்ட மக்களே என கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேச்சு.

நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பூண்டி கலைவாணன் 64,751 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனை அடுத்து திருவாரூர் சட்டமன்றத் தொகுதி வாக்காள பொதுமக்களுக்கு தொடர்ந்து நன்றி தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் இன்று கூட்டணி கட்சி தொண்டர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பேசுகையில், நான் இந்த தொகுதியில் வெற்றி பெற மாட்டேன் என்றும், எனக்கு சில சமுதாய மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்றும் சிலர் கூறிவந்தனர். ஆனால் இன்று நான் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு காரணமே சிறுபான்மை மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் தான் என நிகழ்ச்சி மிகுதியில் பேசினார்.

முன்னதாக திருவாரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை திறந்து வைத்த அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.