ETV Bharat / state

கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் ஆய்வு - Thiruvar district Ministers inspection

திருவாரூர்: திருவாரூரில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

திருவாரூரில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் ஆய்வு

author img

By

Published : Jun 17, 2021, 9:50 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கை பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், அரசு முதன்மை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் ஆகியோர் அடியக்கமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

தொடர்ந்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், "கரோனா நோய்த்தொற்றிலிருந்து தமிழ்நாடு மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அனைத்து மாவட்டத்திற்கும் நோய்த்தொற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை சிறப்பாக மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மூத்த இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களையும் நியமித்து அவர்கள் மூலம் தொடர் நடவடிக்கைகளை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருவாரூரில் கரோனா நோய்த்தொற்று 905லிருந்து 154ஆகக் குறைந்துள்ளது. மிக விரைவில் தொற்றில்லா மாவட்டமாக திருவாரூரை உருவாக்குவோம். கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கென தேவைப்படும் அறிவுரைகள், உதவிகள் பெறுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களின் புதிய முயற்சியினால் தனி சேவை எண் - 93421 22886 தொடங்கப்பட்டுள்ளது.

அதேபோல், பணியாளர்களின் குறைகளை தீர்ப்பதற்கு தனி சேவை எண்ணான - 9342152914 தொடங்கப்பட்டுள்ளது. இதனை, தொடர்பு கொண்டு மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" எனக் கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.