ETV Bharat / state

‘வாழவிடு... வாழவிடு... விவசாயத்தை வாழவிடு’ - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராகத் தீர்மானம் - ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக தீர்மானம்

திருவாரூர்: 100க்கும் மேற்பட்ட கிராமசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் சார்பில் ஒருமனதாக தீர்மானமானங்கள் நிறைவேற்றப்பட்டன.

gram sabha
gram sabha
author img

By

Published : Jan 27, 2020, 1:38 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 430 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் நடைபெற்றது. பெரும்புகலூர் கிராமத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஐயப்பன் தலைமையில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி மன்றத் தலைவரால் நடத்தப்பட்ட முதல் கூட்டம் என்ற அடிப்படையில், இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குறிப்பாக, விவசாயத்தை அழிக்கும் வகையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் பகுதியில் நிறைவேற்ற விடமாட்டோம் என ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் சார்பில் முழக்கமிட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம்

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியான அடியக்கமங்கலம், வரம்பியம், கொத்தமங்கலம், கோட்டூர், இருள்நீக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: 32 வீட்டுமனைப்பட்டா... 2 பேருக்கு உதவித்தொகை... உடனுக்குடன் குறைகளுக்குத் தீர்வு கண்ட வேலூர் கலெக்டர்

Intro:

Body:திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிராமசபையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு 430 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சிமன்ற தலைவரால் நடத்தப்பட்ட முதல் கூட்டம் என்ற அடிப்படையில் தங்கள் பகுதிக்கு தேவையான மற்றும் தேவையற்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதில் திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஐயப்பன் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதல் தீர்மானமாக விவசாயத்தை அழிக்கும் வகையில் உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தங்கள் பகுதியில் நிறைவேற்ற விடமாட்டோம் என ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் முழக்கமிட்டு ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியான அடியக்கமங்கலம்,வரம்பியம், கொத்தமங்கலம், கோட்டூர், மற்றும் இருள்நீக்கி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேசிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பேட்டி
ஐயப்பன்,
ஊராட்சி மன்றதலைவர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.