திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள வடகுடி கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இப்பள்ளியின் தலைமை ஆசிரியையாக உள்ள மணிமேகலை என்பவர் இங்கு பயிலும் மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்ய சொல்வதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும் கூறப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட புத்தகங்களை மாணவர்களுக்கு விற்பனை செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து கேட்க பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தலைமையாசிரியை மணிமேகலையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, கல்வித்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க
தற்கொலைக்கு தூண்டுகிறார்கள்: மருத்துவக் கல்லூரி உதவி பேராசிரியை ஃபேஸ்புக்கில் கதறல்