திருவாரூர் மாவட்டம் கிடாரங்கொண்டான் பகுதியில் அமைந்துள்ள அரசு கலைக் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவ மாணவிகளுக்கான இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை, இலவச பேருந்து பயண அட்டை உள்ளிட்டவை இதுவரை வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இதனை கண்டித்து 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்களுக்கு உடனடியாக இலவச பஸ் பாஸ், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி வாயில் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் தஞ்சாவூர்- நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் சாலைமறியலை மாணவ மாணவிகள் கைவிட்டனர்.
இதையும் படியுங்க:
5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரம் - புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கூடுதல் ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் போராட்டம் !