ETV Bharat / state

மின் விநியோகத்தில் தனியார் மயம்... மின்வாரிய தொழிற்சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவாரூர்: மின் விநியோகத்தில் தனியார் மயத்தை இணைப்பதை கண்டித்து மின்வாரிய தொழிற் சங்கங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

electricity workers
electricity workers
author img

By

Published : Jun 2, 2020, 4:24 AM IST

மின் விநியோகங்களில் தனியார்மயத்தை இணைக்கும் விதமாக, முதற்கட்டமாக யூனியன் பிரதேசங்களில் தனியார்மயத்தை புகுத்திட மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்த நடவடிக்கை விரைவில் மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கைவிடக் கோரியும் அனைத்து மின்வாரிய அலுவலங்கள் முன்பு 10 நிமிடம் ஒலி முழக்கமிட தமிழ்நாடு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்தது.

அதன்படி, மன்னார்குடி பூக்கொல்லை சாலையில் உள்ள மின்வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற் சங்கத்தினர் ஒலி முழக்கம் எழுப்பி மத்திய அரசுக்கு எதிராக தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்‌.

சம்மேளன பிரதிநிதி த.ராஜகோபால் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருச்சி மண்டல செயலாளர் சா. சம்பத், தொழிலாளர் முன்னேற்ற சங்க திட்ட சிறப்பு தலைவர் இ.ஜோதி ராமலிங்கம் மற்றும் அனைத்து சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.