திருவாரூர் மாவட்டம் மாங்குடி, தென்னவராயன்நல்லூர், கூடுர் உள்ளிட்டச் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களில் நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் நேரடி நெல் விதைப் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், " குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நம்பிக்கையில் சாகுபடியை தொடங்கிவிட்டோம் இரண்டு முறை மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்தும் எங்கள் பகுதி வரை தண்ணீர் வரவில்லை.
ஆறுகள் அனைத்தும் வறண்டு போய் காணப்படுகின்றன. தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் கருகி மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. எனவே எங்களின் நிலை உணர்ந்து தண்ணீர் திறந்து விவசாயத்தை அரசு காத்திட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மயிலாடுதுறை: காவிரி நீர் பாசனத்துக்கு கிடைக்காததால் விவசாயிகள் வேதனை!