சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிவர்ஸ் யுனோவேஷன் லேப்ஸ் என்ற நிறுவனம் கரோனா போன்ற கொடிய வைரஸ்களை 5 நிமிடங்களில் அழிக்கக்கூடிய புதிய கருவியை திருவாரூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கண்டுபிடிப்பைப் பற்றி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கிருஷ்ணா கூறுகையில், யூவி பை என்கின்ற இந்த புதிய கண்டுபிடிப்பு யூவி கதிர்கள் மூலம் இயங்க கூடியது. ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்க கூடிய ஆற்றல் கொண்டது.
இக்கருவியை, நான்கு அடைக்கப்பட்ட அறைகளில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதில் மோஷன் சென்சார் இருப்பதால் ஆள் இல்லாத நேரங்களில் தானாகவே வேலை செய்யும். இதனால் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் பரவுவதை முற்றிலுமாக தடுக்க முடியும். சானிடைசர் அழிக்கமுடியாத நுண் கிருமிகளை கூட அழிக்கும் தன்மையுடைய இக்கருவி முதன் முறையாக திருவாரூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையான டீ.எம்.சியில் பொருத்தப்பட்டு இயங்கி வருகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: