திருவாரூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இரண்டு வாரங்களாக கிராம சுகாதார செவிலியரின் முன்பயண திட்டத்தின்படி செப்டம்பர் 14 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இம்முகாம்களில் குழந்தைகளுக்கு ஒரு வயது முதல் 19 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.
இதன் மூலம் குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி, அறிவுத் திறன், மேம்பாடு திறன் உள்ளிட்டவை அதிகரிக்கும் என்பதால் மாத்திரைகள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அங்கன்வாடி,துணை சுகாதார நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், என 1,260 இடங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படும்.
இம்மருத்துவ முகாமை திருவாரூர் நகராட்சிக்கு முதலியார் தெரு அங்கன்வாடியில் தேசிய குடல் புழு வாரத்தை முன்னிட்டு அங்கன்வாடிகளில் உள்ள குழந்தைகளுக்கான குடற்புழு நீக்கம் மாத்திரைகளை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்டம் முழுவதும் 2 லட்சத்து 87 ஆயிரத்து 713 குழந்தைகளுக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் சுகாதாரத்துறை இயக்குனர் விஜயகுமார், திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துக்குமார், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.