ETV Bharat / state

பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கும் ஆட்சியர் - kissan scheme

திருவாரூர்: திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா தாளடி பயிர்களுக்கு காப்பீடு செய்யும் கால அவகாசம் இம்மாதத்துடன் நிறைவடைய உள்ளதால் விரைந்து பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சாந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

Thiruvarur Collector calls on pm kissan scheme

author img

By

Published : Nov 4, 2020, 2:19 PM IST

இதுதொடர்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், "விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும் பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் அதிநவீன தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதை ஊக்குவிக்கவும் திருவாரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி காப்பீட்டு திட்டம் 2016 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு 2020ஆம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெரும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீட்டுத் தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசால் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட காப்பீட்டு நிறுவனமான இப்ஃப்கோ டோகியோ ஜெனரல் இன்சுரன்ஸ் கம்பனி லிமிட்டேட் மூலம் திருத்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் சம்பா தாளடி பருவங்களில் செயல்படுத்த ஆணை வழங்கப்பட்டுள்ளது.

சம்பா தாளடி பருவங்களில் செய்யப்படும் நெல் பயிரினை பயிர் காப்பீடு செய்ய அறிவிக்கை செய்யப்பட்டு விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்துவதற்கான கால கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களும் இத்திட்டத்தின்கீழ் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

சம்பா தாளடி நெல்லினை காப்பீடு செய்ய இம்மாதம் 30ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இதில் ஏக்கருக்கு 488 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். எனவே சம்பா தாளடி நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் சம்பா தாளடி நெல் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம்.

கடன் பெற விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கலை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலேயே அல்லது தேசிய வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

எனவே விவசாயிகள் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் முன் இத்திட்டத்தில் தங்களது பெயர்களை விரைந்து காப்பீடு செய்து கொள்ளுமாறு" குறிப்பிட்டுள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.