திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட வேலங்குடி ஊராட்சி கமுதக்குடி கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 50 ஆண்டுகளாக இந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லாத நிலையில் மக்களின் பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு 20 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதியை மாவட்ட நிர்வாகத்தினர் செய்து கொடுத்தனர்.
தற்போது சாலையானது பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக சாலை முழுவதும் பெயர்ந்து காணப்படுகின்றது. இதனால் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வர முடியாத சூழ்நிலை உள்ளது.
இதுகுறித்து பலமுறை வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் மற்றும் அமைச்சர்களிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. விரைவில் சாலையை சீரமைக்கவில்லை என்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'விருதுநகரில் சிதிலமடைந்து காணப்படும் புதிய பேருந்து நிலையம்' #Exclusive