நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி இஸ்லாமியர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும் தலைநகரான டெல்லியில் இது தொடர்பாகப் போராட்டத்தில் நடந்த கலவரத்தின்போது 38 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அதனை அமல்படுத்தக் கோரியும் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் பேரணி நடைபெற்றுவருகிறது.
அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் மாவட்டத்தில் சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகவும், இச்சட்டத்தை எதிர்த்தும் தமிழ்நாட்டில் வன்முறையைத் தூண்டுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜகவினர் பேரணியாகச் சென்றனர்.
இந்தப் பேரணியானது மேலவீதியிலிருந்து நகரின் முக்கியத் தெருக்களின் வழியாகப் பழைய ரயில் நிலையம் வரை நடைபெற்றது. அப்போது, பாஜகவினர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகக் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதையும் படிங்க:மூதாட்டி கழுத்து அறுத்துக் கொலை; சிக்கியது சிறுவனின் சிசிடிவி காட்சி