திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை தமிழ்நாட்டில் அமல்படுத்தக்கூடாது, வேளாண் சட்டத்தை உடனே வாபஸ் பெற வேண்டும், புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்தகூடாது, விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடாது, மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் நோக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:
அதிமுக முதலமைச்சர் வேட்பாளர்: ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் சேஃப் மூவ்?