ETV Bharat / state

கடன் பிரச்னை - அதிமுக ஊராட்சித் தலைவர் தற்கொலை - thiruvarur district news

திருவாரூர் அருகே அதிமுக ஊராட்சித் தலைவர் கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தற்கொலை
author img

By

Published : Aug 1, 2021, 7:31 AM IST

திருவாரூர் : குடவாசல் அடுத்துள்ள நெடுஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம் (45). இவருக்கு இந்திரா என்கிற மனைவியும் ஐஸ்வர்யா, பேபி ஷாலினி என்கிற இரண்டு மகள்களும் உள்ளனர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நெடுஞ்சேரி ஊராட்சியில் அதிமுக சார்பில் முருகானந்தம் போட்டியிட்டு நெடுஞ்சேரி கிராமத்தில் ஊராட்சித் தலைவராக பதவி வகித்து வந்துள்ளார்.

முருகானந்தம் தேர்தலுக்கு முன்னதாக பல்வேறு நபர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று நெடுஞ்சேரி பகுதியின் ஆற்றங்கரை ஓரத்தில் முருகானந்தம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் முருகானந்தத்தின் வீட்டிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக, அவரை மீட்ட உறவினர்கள் குடவாசல் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகவும் மேலும் பூச்சிமருந்து குடித்திருக்கலாம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து, குடவாசல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டதில் முருகானந்தம் பல லட்ச ரூபாய் கடன் பிரச்னையில் இருந்ததாகவும் கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தை திருப்பி கேட்டு வந்ததாக கூறப்படுகிறது.

விரக்தியில் தற்கொலையா?

பணத்தை திருப்பி கொடுக்க முடியாத காரணத்தினால் விரக்தியில் இருந்த முருகானந்தம், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று உறவினர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, முருகானந்தத்தின் உடல் உடற்கூராய்வுக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொணடு வருகின்றனர்.

இதையும் படிங்க: கரோனா ஊரடங்கு அவலம் - கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட எம்பிஏ பட்டதாரி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.