திருவையாறு அடுத்த அரசூரில் 164ஆவது வாக்குச்சாவடியில், அரசூர் கீழத்தெருவைச் சேர்ந்த குமரவேல் மகன் பாலமுருகன் (19), இந்த முறை புதிதாக வாக்களிக்க வந்தநிலையில், இவரது வாக்கை புதுத் தெருவைச் சேர்ந்த, அதே பெயரைக் கொண்ட குமரவேலின் 16 வயது மகன் பாலமுருகனுக்குத் தவறுதலாக பூத் சீலிப் சென்றுவிட்டதால், அவர் வாக்களித்து சென்றுவிட்டார்.
பின் பாலமுருகன் (19) வாக்களிக்க வரும்போது, அவரது வாக்கு செலுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்தனர். ஆனால் பாலமுருகன் வாக்கு அளிக்கவில்லை என்று கூறிய பிறகு, அலுவலர்கள் ஆய்வுசெய்த பிறகு 16 வயதுடைய பாலமுருகன் வாக்களித்தது தெரியவந்தது. பிறகு பாலமுருகனுக்கு வாக்கு அளிக்க அனுமதி அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வாக்களித்துச் சென்றார். இதனால் சுமார் ½ மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோன்று அதே அரசூர் வன்னியர் தெருவைச் சேர்ந்தவர் அஞ்சம்மாள் (55), புதுத்தெருவை சேர்ந்தவர் அஞ்சம்மாள் (53) இருவருடைய கணவர் பெயரும் செல்வராஜ்.
புதுத்தெருவில் வசித்துவரும் அஞ்சம்மாள் வாக்குச் செலுத்திவிட்டு சென்றுவிட்டார். பிறகு வன்னியர் தெருவில் வசிக்கும் அஞ்சம்மாள் வாக்குச் செலுத்த வரும்பொழுது, உங்கள் வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டுவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
பின் அலுவலர்கள் ஆய்வுசெய்தனர். ஆய்வில் ஒரே பேர் கொண்டதால் மாற்றி வாக்களித்தது தெரியவந்தது. பிறகு வன்னியர் தெருவைச் சேர்ந்த அஞ்சம்மாள், புதுத்தெரு அஞ்சம்மாள் வாக்கைச் செலுத்த அலுவலர்கள் சொன்ன பிறகு, அஞ்சம்மாள் வாக்கு அளித்துச் சென்றார்.
இதையும் படிங்க: டோக்கன் கொடுத்த வானதி சீனிவாசனை தகுதிநீக்கம் செய்யக்கோரி கமல் புகார்