திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகே எழிலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதவிருக்கும் மாணவ, மாணவியார்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இதில் தேர்வு எழுதும் அனைவருக்கும் உரிய ஆலோசனைகளை தமிழ்நாடு அரசின் 'கனவு ஆசிரியர் விருது' பெற்ற பட்டதாரி ஆசிரியர் சித.க. செல்வசிதம்பரம், பன்னாட்டு அரிமா சங்க திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் தங்க பாபு ஆகியோர் பங்கேற்று, மாணவ - மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினர்.
இப்பயிற்சியில், வரவிருக்கும் பத்தாம் வகுப்பு தேர்வு தினங்களில், மணவர்கள் காலை வேளைகளில் தினமும் முன்கூட்டியே எழுந்து படிக்க வேண்டும். செல்போன், தொலைக்காட்சி பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தேர்வு எழுதி முடிக்கும் வரை முற்றிலும் தவிர்க்க வேண்டும். படங்களில் ஏற்படும் ஐயங்களை அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டது.
மேலும், கேள்வித்தாளை வாங்கியதும் நன்கு படித்து எழுதுவதற்கு முன் யோசிக்கவேண்டும், தேர்வு எழுதிய பின்பு விடைத்தாளை நன்கு வாசிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளைக் கூறியதோடு, மாணவர்களை வைத்து சில எளிய முறை பயிற்சிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் செய்துகாட்டினர்.
இதையும் படிங்க:தொற்று நோய் பரவாமல் தடுக்க இலவச முக கவசம்