ETV Bharat / state

இருதரப்பினரிடையே மோதல் - 8 மாதத்திற்குப் பின் தரிசனம் வழங்கிய சாமி! - வண்டாம்பாளை ஊராட்சியில் 8 மாதமாக பூட்டி வைக்கப்பட்ட கோயில்

திருவாரூர்: இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக எட்டு மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த கோயில், இன்று திறக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

temple reopen after eight months in Thiruvarur district
author img

By

Published : Nov 24, 2019, 3:37 PM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்கு உட்பட்ட வண்டாம்பாளை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மகா சக்தி மாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவின்போது, அம்மன் ஊர்வலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே கலவரம் ஏற்பட்டது. இதனால், திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்து, இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

திருவாரூர் மாவட்டத்தில் எட்டு மாதங்களாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கோயில் திறப்பு

இதில் இரு தரப்பினக்குமிடையே இணக்கம் ஏற்படாததால் சாமியை வழிபட தடை விதித்து, ஏப்ரல் 13ஆம் தேதி கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. பின்னர் இறுதியாக கடந்த நவம்பர் 21ஆம் தேதி, திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் வட்டாட்சியர், காவல் நிலைய ஆய்வாளர், கிராம மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி இன்று காலை எட்டு மாதங்களாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மாரியம்மன் கோயில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் ஒன்று சேர்ந்து கோயிலைச் சுத்தம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:

'நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு' - அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றம்!

Intro:

Body:திருவாரூர் அருகே இரு தரப்பு பிரச்சனையின் காரணமாக 8 மாதங்களாக பூட்டப்பட்ட கோவில் இன்று திறக்கப்பட்டதால் பக்தர்கள் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் அருகே நன்னிலம் தாலுகாவில் உட்பட்ட வண்டாம்பாளை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவின்போது அம்மன் ஊர்வலம் தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை ஏற்பட்டதால் ஏப்ரல் 12ம் தேதி திருவாரூர் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்தார். மேலும் இரு தரப்பினரிடமும் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் மேலும் பிரச்சனை ஏற்படாமலிருக்க இரு தரப்பினரும் சாமியை வழிபட தடை விதித்து ஏப்ரல் 13ம் தேதி கோயில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பல கட்ட அமைதி பேச்சுவார்த்தையில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.

பின்னர் இறுதியாக நவம்பர் 21ம் தேதி வியாழக்கிழமை திருவாரூர் வருவாய் கோட்ட அலுவலர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் வட்டாட்சியர், காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பினரும் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி இன்று காலை எட்டு மாதங்களாக பூட்டி சீல் வைக்கப்பட்டு இருந்த வந்த மாரியம்மன் கோவில் வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரதா முன்னிலையில் கோவிலின் சிலை அகற்றப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து அப்பகுதியில் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பக்தர்கள் ஆர்வமுடன் ஒன்று சேர்ந்து கோவிலை சுத்தம் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.