திருவாரூர் மாவட்டம், வலங்கைமான், வரதராஜன் பேட்டையில் அமைந்துள்ள பாடைக்கட்டி மாரியம்மன் என்று சிறப்பு பெயர்பெற்ற ஸ்ரீ சீதளாதேவி மகாமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில் ஆலயத்தில் புதிதாக மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு, இந்து சமய அறநிலயத் துறையின் ஆதரவோடும், உபயதாரர்களின் உதவியுடனும் சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய யாகசாலை பூஜையானது தொடர்ந்து ஐந்து நாட்களாக எட்டு கால பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் இன்றுவேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் கடங்கள் கோவிலை வலம் வந்து விமானங்களை சென்றடைந்தது.அதனை தொடர்ந்து கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டார். மேலும் இந்த விழாவில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர். பக்தர்களின் பாதுகாப்பிற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: சேலத்தில் தேமுதிக கொடி நாள் கொண்டாட்டம்!