ETV Bharat / state

’பெயரளவில் தான் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது’ - விவசாயிகள் குற்றச்சாட்டு!

திருவாரூர்: இந்திய பருத்தி கழகத்தின் மூலம், பெயரளவில் தான் பருத்தி கொள்முதல் செய்யப்படுகிறது என்று விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பருத்தி கொள்முதல்
பருத்தி கொள்முதல்
author img

By

Published : Jun 12, 2020, 5:08 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக குறுவை சாகுபடி சரிவர நடைபெறவில்லை. அதைத் தொடர்ந்து, ஒரு போக சம்பா சாகுபடி மட்டும் பல்வேறு நெருக்கடிகளுக்கு உள்ளாகி மகசூல் இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வந்தனர்.

இந்தச் சூழலில் கோடைகால சாகுபடியான பருத்தி சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட தொடங்கி ஓரளவுக்கு விவசாயிகளுக்கு மகசூல் கொடுத்த நிலையில், நடப்பாண்டில் திருவாரூர் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி சாகுபடி நடைபெற்று வருகிறது.

பருத்தி கொள்முதல்
பருத்தி கொள்முதல்
இந்த பருத்தியை வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அமைக்கப்பட்ட கொள்முதல் நிலைய ஏலத்தின் மூலம் இந்திய பருத்தி கழகம் கொள்முதல் செய்து வந்த நிலையில், நடப்பாண்டில் விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியில் குறைந்த அளவு பருத்தியை மட்டுமே கொள்முதல் செய்கிறார்கள். இதனை பயன்படுத்தி வியாபாரிகளும் மீதமுள்ள பருத்தியை குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் பேரம் பேசுகின்றனர்.
பருத்தி கொள்முதல்
பருத்தி கொள்முதல்
தற்போது குறுவை சாகுபடி தொடங்க உள்ள நிலையில் பெரும் பொருளாதார பின்னடைவை சந்தித்த விவசாயிகள் பருத்தியை விற்க முடியாமல் திணறி வருகிறார்கள். பருத்திக்கான வரியும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், செட் வரியை கொண்டு நிர்வகிக்கப்பட்டு வந்த ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தொடர்ச்சியாக செயல்படுமா என்ற அச்சம் ஒரு புறம் விவசாயிகளிடம் இருந்து வருகிறது.
பேட்டி: கண்ணன்
எனவே, பருத்தி சாகுபடி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு அரசு இந்திய பருத்தி கழகம் விவசாயிகள் கொண்டுவரும் பருத்தியை முழுமையும் கொள்முதல் செய்ய வேண்டும். மேலும், தொடர்ச்சியாக மார்க்கெட்டில் கமிட்டி செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாமாயில், மண்ணெண்ணெய்க்கு வரி விலக்கு - அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.