ETV Bharat / state

கோயில் குடமுழுக்கு விழா - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

author img

By

Published : Dec 16, 2021, 6:14 PM IST

திருவாரூர் மாவட்டம் மேல திருப்பாலக்குடி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரைவீரன் கோயில் குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவாரூர் மதுரை வீரன் கோவில்  குடமுழுக்கு திருவிழா  100ன் ஆண்டு பழமை  thiruvarur kudamuzuku festival  2000 people annathanam  huge crowd devine god
குடமுழுக்கு விழா

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள மேலத்திருப்பாலக்குடி கிராமத்தில் நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை வீரன் கோவிலில் இன்று குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் மேலத்திருப்பாலக்குடி, உள்ளிக்கோட்டை ,ஆலங்கோட்டை, பரவாக்கோட்டை உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர். இவர்கள் ஆலயத்தில் உள்ள மதுரை வீரனை பரம்பரை பரம்பரையாக குலதெய்வமாக வணங்கி வருகிறார்கள்.

மதுரைவீரன் கோவிலில் கடந்த 3 நாட்களாக யாகசாலை உருவாக்கி யாகம் வளர்த்து பல்வேறு அபிஷேகங்கள் ஆகம விதிகளின்படி தொடர்ந்து நடைபெற்று வந்தன.இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடமுழுக்கு வெகு சிறப்பாக நடைபெற்றது. இங்த விழாவில் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:ஆம்பூரில் ஆட்டுத் தந்தூரி - வைரல் காணொலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.