கரோனா காலத்தில் ரத்த பற்றாக்குறையைச் சமாளிக்கும்விதமாக அடியக்கமங்கலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளையின் சார்பாக மேல செட்டி தெரு அல்காதிரியா தொடக்கப்பள்ளியில் மாபெரும் ரத்ததான முகாம் அடியக்கமங்கலம் கிளைத் தலைவர் முஸ்தாக் அகமது தலைமையில் நடைபெற்றது.
கரோனா பேரிடர் காலத்தில் ரத்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
தற்போது அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அடியக்கமங்கலத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு குருதிக்கொடை அளித்தனர்.
இம்முகாமில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் பிரீத்தா, செவிலியர், ஆய்வக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கடந்த மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை தமிழ்நாடு முழுவதும் 170-க்கும் மேற்பட்ட ரத்ததான முகாம்கள் மூலமாகவும் அவசர ரத்த தான சேவைகள் மூலமாகவும், சுமார் 10,500 யூனிட்டுக்கு மேல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பாக ரத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.