ETV Bharat / state

ஐரோப்பாவில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர்.. நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 11:34 AM IST

Updated : Aug 29, 2023, 2:42 PM IST

World athletics championships 2023: இந்தியா சார்பாக யூரோப்பியாவில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரரின் போட்டியை ஆர்வமுடன் வீட்டிலிருந்து பார்த்த குடும்பத்தினர்.

யூரோப்பியாவில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர்

யூரோப்பியாவில் நடைபெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்ட தமிழக வீரர்!

திருவாரூர்: பேரளம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் இவர் பேரளம் பகுதியில் தட்டச்சு பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இவருக்கு அருண், ராஜேஷ், ஹரிஷ் என்கிற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்த மகன் மற்றும் இளைய மகன் ஆகியோர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். இவரது இரண்டாவது மகன் ராஜேஷ் வயது 23. இவர் திருச்சி தென்கை ரயில்வே துறையில் பயணச்சீட்டு பரிசோதகராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் பேரளம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வந்துள்ளார். பள்ளி பருவம் முதல் தடகள போட்டியில் ஆர்வம் கொண்டு பல்வேறு பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்று வந்துள்ளார்.கடந்த 2006ம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போது மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர் தொடர்ந்து மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த மாதம் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற கலப்பு தொடர் ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்டு முதல் இடத்தை பிடித்துள்ளார். அதேபோன்று இலங்கையில் நடைபெற்ற போட்டியிலும் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் ஐரோப்பாவின் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த எட்டு நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜேஷ், கேரளாவைச் சேர்ந்த முகமது ஆனாஸ், முகமது அஜ்மல் மற்றும் டெல்லியைச் சேர்ந்த ஹமூர் ஜாகப் ஆகிய நான்கு பேரும் இந்த போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: Neeraj Chopra : இந்த பதக்கம் இந்தியாவுக்கானது.... வரலாற்று நாயகன் நீரஜ் சோப்ரா!

இந்த நிலையில் நேற்று (27.08.2023) நடைபெற்ற அரை இறுதி சுற்றில் இரண்டாம் இடத்தை இந்திய அணி பிடித்து உள்ளது. மேலும் இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு இறுதி போட்டி நடைபெற்றது.இந்த போட்டியினை ராஜேஷ் குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்தனர்.இதில் இந்திய அணி ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக உலக தடகளப் போட்டியில் இறுதிப்போட்டிக்கு வெற்றி பெற்ற இந்திய அணிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ராஜேஷின் பெற்றோர்கள் கூறுகையில், “ சின்ன வயதிலிருந்து மிகவும் சிரமப்பட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த தோல்வி மனதுக்கு கஷ்டமாக இருந்தாலும் இவ்ளோ தூரம் போய் விளையாடியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அடுத்த போட்டியில் கண்டிப்பாக வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார். ரஜேஷிற்கு நாங்கள் எப்போதும் உறுதுணையாக இருப்போம் , மேலும் அவர் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொண்டு தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்ப்பார். தமிழக முதலமைச்சர் வாழ்த்து கூறியது மிகவும் மகிழ்ச்சியளித்தது. ” என கூறினார்கள்.

இதையும் படிங்க: தென் ஆப்பிரிக்கா டி20 தொடர்: ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் விலகல்!

Last Updated : Aug 29, 2023, 2:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.