ETV Bharat / state

அமைச்சர்கள் கிடைப்பதை கொள்ளையடிக்கின்றனர்- ஸ்டாலின் - திமுக தலைவர் ஸ்டாலின்

திருவாரூர்: தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள் கிடைப்பதை கொள்ளையடித்து வருகின்றனர் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

Tamil Nadu ministers are robbing availability said dmk leader Stalin

author img

By

Published : Jan 4, 2021, 2:13 PM IST

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் உள்ள அவலிவநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

அதில்,"தந்தை பெரியார் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை வழங்க தீர்மானம் இயற்றினார். கருணாநிதி அதனை சட்டமாக இயற்றினார். அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33 விழுக்காடு ஒதுக்கினார். பெண்கள் பொருளாதார ரீதியில் சுயமாக முன்னேற மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடங்கினார். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கிக்கடன் மற்றும் சுழல் நிதியை வழங்கினேன்.

எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் மின்சாரக்கட்டணத்தை குறைக்கக்கோரி போராடியவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால், விவசாயிகள் கேட்காமலே இந்தியாவிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார் கருணாநிதி.

Tamil Nadu ministers are robbing availability said dmk leader Stalin
திமுக தலைவர் ஸ்டாலின்

பச்சைத்துண்டுப்போட்டால் எடப்பாடி பழனிசாமி விவசாயியா? அவர் பச்சைத் துரோகி. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்சட்டங்களால் விவசாயம் தனியார்மயமாகும். பா‌ஜக தவிர அனைத்து மாநில முதலமைச்சர்களும் எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றும் போது பழனிச்சாமி அதனை ஆதரிக்கிறார்.

கஜா மற்றும் நிவர் புயலின் போது விவசாயிகளுக்கு முதலில் இடைக்கால நிவாரணத்தொகையாக ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று‌ கோரிக்கை வைத்தேன்‌. ஆனால் முதலமைச்சர் வழங்கவில்லை.

தற்போது உணவுத்துறை அமைச்சராக உள்ளவரை காமராஜ் என்று அழைக்காமல் கமிஷன் ராஜ் என்று அழைக்கும்படி செயல்படுகிறார்.

அவர் பிரதமரின் விவசாயிகள் திட்டத்தில் முறைகேடு செய்துள்ளார். இருக்கும்‌ நான்கு மாதங்களில் தமிழக அமைச்சர்கள் கிடைப்பதை கொள்ளையடித்து வருகின்றனர்" எனக் குற்றம் சாட்டினார்.

பின்னர் கிராம ஊராட்சியில் உள்ள நீண்ட கால பிரச்னைகள் குறித்து கிராம மக்களிடம் கேட்டறிந்தார்.

இதையும் படிங்க: ஸ்டாலின் கடைசிவரை முதலமைச்சர் ஆக முடியாது- மு.க. அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.