திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கொத்தாரங்குடி பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் கனமழையால் பள்ளி வளாகம் முழுவதும் தண்ணீரால் நிரம்பி காட்சியளிக்கிறது. தேங்கிய மழை தண்ணீர் வெளியேறுவதற்கு எந்தவித நடவடிக்கையும் பள்ளி நிர்வாகம் சார்பில் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தேங்கிக் கிடக்கும் மழை தண்ணீரில் கழிவுநீரும் கலப்பதாக பள்ளி மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மாணவர்கள் காய்ச்சல் வரக்கூடுமோ என்ற பீதியிலேயே தினமும் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
இதையும் படிங்க: மழைநீரை அகற்றக்கோரி சட்டமன்ற உறுப்பினர் போராட்டம்