ஐந்தாம் , எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவுசெய்து மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதுகுறித்து அந்தந்த மாநிலங்களில் முடிவு செய்துகொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்தது. மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி ஐந்தாம், எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.
இதற்குப் பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஐந்தாம், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் வகுப்புகளைப் புறக்கணித்து, கல்லூரி வளாகத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.