ETV Bharat / state

மதிய உணவு சாப்பிட்டு 18 மாணவர்களுக்கு மயக்கம்! - உடல்நலக்குறைவு

திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதில் ஆறு மாணவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.

மதிய உணவு சாப்பிட்டு 18 மாணவர்களுக்கு மயக்கம்
author img

By

Published : Jul 18, 2019, 7:46 PM IST

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி அருகே நடுவெளிகளப்பால் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 65-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்றுவருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளியில் வழக்கமாக மதிய சத்துணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவர்கள் 18 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது.

அரசு மருத்துவமனை

ஆசிரியர்கள் மயங்கிவிழுந்த மாணவர்களை உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதில் 12 மாணவர்கள் குணமடைந்துள்ளனர். ஆறு மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இது குறித்து வட்டாரக் கல்வித்துறை சார்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

Intro:Body:திருத்துறைப்பூண்டி அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்டு உடல நல குறைவு ஏற்பட்ட 18 மாணவர்களில் ஆறு மாணவர்கள் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதி.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நடுவெளிகளப்பால் பகுதியில் அரசு நடுநிலை பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 65க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பள்ளியில் வழக்கமாக மதிய சத்துணவு வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட மாணவர்கள் 18பேருக்கு அலர்ஜி, மயக்கம் ஏற்பட்டது. உடனே ஆசிரியர்கள் மாணவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கினர். இதில் 12 மாணவர்கள் குணமடைந்த நிலையில்
சுரேஷ் , ரியாஷ், அஜய் பொன்ராஜ் , டேவிட் ராஜ் , அய்யப்பன் , கிஷோர் தீபன்ராஜ் ஆகிய ஆறு மாணவர்களுக்கு மேல் சிகிச்சைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இது குறித்து வட்டார கல்விதுறை சார்பில் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.