திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே உள்ள பிளாவாடி கிராமத்தில் தமிழ்நாடு அரசின் வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் வேளாண் துறை இணைந்து விவசாயிகளுக்கு வாடகைக்கு இயந்திரங்களை விடும் நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அவர்களிடம் கூறியதாவது, '8 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் 12இல் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளது. தண்ணீர் கடைமடை பகுதிகளுக்குச் சென்று அடையும் வகையில், 90 விழுக்காடு ஆறுகள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன.
மேலும் விவசாய உபகரணங்கள் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக்குழு மற்றும் வேளாண்மைத்துறை இணைந்து வாடகைக்கு இயந்திரங்கள் விடும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அதுபோல 'டெல்டா மாவட்டங்களில் ஆறுகளின் நடுவே நடைபெறும் கட்டுமானப் பணிகள் 90 விழுக்காடு நிறைவடைந்து விட்டது. மேலும் ஜூன் 16ஆம் தேதி கல்லணை திறந்த பிறகு ஓரிரு தினங்களில் கடைமடைப் பகுதியான திருவாரூர், நாகை மாவட்டங்களில் தங்குதடையின்றி தண்ணீர் வந்து சேர்ந்துவிடும்' என்றார், அமைச்சர் காமராஜ்.
இதையும் படிங்க: முதலமைச்சர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்