திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டக் குழு கூட்டம், மாவட்ட துணைத் தலைவர் மகேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்தும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஒருங்கிணைந்த மத்திய சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும், நூறு நாள் வேலையை 200 நாட்களாக உயர்த்தி தினக்கூலியாக ரூ.500 வழங்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.3000 வழங்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 20ஆம் தேதி டெல்லி நாடாளுமன்றம் முன்பு நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து 500 பேருக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க:பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு குறித்த விழிப்புணர்வு!