திருவாரூர்: மன்னார்குடியில் பழைய தஞ்சை சாலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயில் திருகுடமுழுக்கு (கும்பாபிஷேகம் ) நேற்று ( ஜனவரி 27 ) வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி நான்கு தினங்களாக யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டன.
அதன்படி விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், அக்னி ஹோமம் ஆகியவை நடத்தன. இதையடுத்து நான்காம் காலயாகசாலை பூஜைகள், பிம்பசுத்தி, ரக்க்ஷாபந்தனம் ,நாடி சந்தனாம், மகா பூர்ணாஹூதி நடத்தப்பட்டது.
இறுதியாக புனித நீர் கொண்ட கடங்கள் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விமான கலசங்களைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் கருவறையில் அருள்பாலிக்கும் சித்தி விநாயகருக்குப் புனித நீர் ஊற்றி மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து விசேஷ தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் கோயில் குடமுழுக்கு.. சோழ மன்னனின் பிரமகத்தி தோசம் நீங்கிய தலம்!