திருவாரூர்: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
திருவாரூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பெய்து வந்த தொடர் கனமழையால் 10,000 சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்தன.
குறிப்பாக மன்னார்குடி, வலங்கைமான், குடவாசல் உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் முழுவதுமாக மழைநீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ளது.
விவசாயிகள் மழைநீரை வடியவைக்கும் பணியில் ஈடுபட்டனர். திடீரென்று மீண்டும் பெய்த மழையால் செய்வதறியாமல் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
எனவே கூடுதல் நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Farm Laws: வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு