திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் காமராஜ் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காமராஜ், 'மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழையின் காரணமாகத்தான் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. தமிழ்நாடு அரசு பண்ணை பசுமை கடையின் வாயிலாக வெளி மாநிலங்களிலிருந்து ரூ 40க்கு வெங்காயத்தை பெற்று குறைந்த விலையில் வழங்கி வருகிறது.
இந்நிலையில் வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்தி,ய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதன்படி மத்திய அரசு எகிப்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலிருந்து 17,090 மெட்ரிக் டன் வெங்காயத்தை கொள்முதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. விரைவில் இறக்குமதி செய்த பின்பும், விளைச்சல் அதிகரித்த பின்பும் பழைய நிலைக்கு வெங்காயத்தின் விலை சென்றுவிடும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர்,'வெங்காயம் நிரந்தர விலையேற்றமாக இருக்கக்கூடிய பொருள் அல்ல. வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்ட பின் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கபட்டுவருகிறது. உள்ளாட்சித்தேர்தல் முறையாகத்தான் நடைபெறும் அதில் அதிமுகதான் நிச்சயம் வெற்றிபெறும். திமுக காலத்தில்தான் தேர்தலில் முறைகேடுகள் நடந்தன அதிமுக ஒருபோதும் தேர்தலை கண்டு பயந்தது இல்லை’ என்றார்.
இதையும் படிங்க: வெங்காயம் திருடியவருக்கு அடி, உதை!