திருவாரூர்: நன்னிலம் அருகே குவளை கால் கிராமத்தில் வசித்து வருபவர் பாலமுருகன் (35). இவர் சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் (IT company) பணியாற்றி வருகிறார்.
கரோனா தொற்றின் காரணமாக, சென்னையில் பணியாற்றிய பாலமுருகன், குவளைக் காலிலுள்ள தனது வீட்டில் இருந்தபடி பணியாற்றி வந்தார்.
அடையாளம் தெரியாத நபர்கள் கைவரிசை
இந்நிலையில், நேற்று (செப்.18) இரவு பாலமுருகன் தனது குடும்பத்தாரோடு, ஊட்டிக்கு சுற்றுலா சென்றுள்ளார். இதனால் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் சிலர், பாலமுருகனின் வீட்டு பூட்டை உடைத்து திருடியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அக்கம் பக்கத்தினர் நன்னிலம் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்துள்ளனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவி கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இது குறித்து பாலமுருகனுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து திருட்டு போன பணம் நகை எவ்வளவு என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ரயிலில் கடத்தப்பட்ட 28 கிலோ கஞ்சா: இருவர் கைது