ETV Bharat / state

நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க விவசாயிகள் கோரிக்கை - Request to open direct paddy procurement centers

திருவாரூர்: நன்னிலம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்னிலம் பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க விவசாயிகள் கோரிக்கை

author img

By

Published : Jan 22, 2021, 11:59 AM IST

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தன. இதில் பல்வேறு ரகங்களான சி.ஆர்,1058 ,கோ-16 பொன்னி, உள்ளிட்ட பல ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளான முடிகொண்டான், மாங்குடி, பேரளம், உள்ளிட்ட பல பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் நன்னிலம் பகுதிகள் முழுவதும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளதால் அறுவடை செய்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

மேலும் தொடர்ந்து பெய்த கனமழையால் நெல்மணிகள் முளைக்கத் தொடங்கியுள்ளதாலும், பூஞ்சை நோய் தாக்குதல் அதிகம் தென்படுவதாலும் அறுவடை செய்ததும் உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் கொள்முதல் நிலையங்கள் மூடியுள்ளதால் மிகுந்த வேதனையில் உள்ளனர்.

இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் எந்தெந்த பகுதியில் அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை ஆய்வு மேற்கொண்டு அந்த பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க உத்தரவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:நாகை, மயிலாடுதுறையில் நாளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.