திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பெருகவாழ்ந்தான் ஊராட்சியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய சாதாரண கூலித் தொழிலாளர்கள் வசித்துவருகின்றனர். இவர்கள் நியாயவிலைக் கடைகளில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள கைரேகையை வைத்து நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க வந்துள்ளனர்.
இந்த பயோமெட்ரிக் முறையில் தொடர்ந்து இணையதள பிரச்னை இருப்பதால் கைரேகை வைக்கும் கருவி சரியாக செயல்படாத காரணத்தினால் கடந்த இரண்டு நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் ஒருவர் பொருள் வாங்க பல மணி நேரமாக நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டி இருப்பதால் கூலி வேலைக்குச் செல்பவர்கள் பணிக்கு செல்ல முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
இந்த இயந்திரம் பழுதானால் இதனை சரி செய்வதற்கு சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தான் ஆள்கள் வரவேண்டியுள்ளது. எனவே அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலதாமதமின்றி கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும் எனவுமப் ழைய முறையில் கையெழுத்திட்டு பொருள்களை வழங்கினால் உடனடியாக பொருள்களை வாங்கிச் செல்ல ஏதுவாக இருக்கும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: கிளிக்கு கல்லறை வழிபாடா? எங்கனு தெரிஞ்சிக்கணுமா?