திருவாரூரில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நெடுச்சாலைத் துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்று பழைய பேருந்து நிலையம், விஜயபுரம், கடைத்தெரு, ரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், விளம்பரப் பலகைகள் ஆகியவற்றை அகற்றும் பணிகள் நடைபெற்றது.
சாலையோரங்களில் தளங்கள் அமைப்பதால், நிலத்தடிக்கு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுவருகிறது. மேலும், சாலை ஆக்கிரமிப்பினால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர்.
இந்நிலையில், நகராட்சி உதவி கோட்ட செயற்பொறியாளர் சந்திரசேகரன், நெடுஞ்சாலை இளநிலை பொறியாளர் குமார செல்வன் ஆகியோர் தலைமையில் ஆக்கிரமிப்புகள் காவல்துறை உதவியுடன் இன்று அகற்றப்பட்டன.
இதற்கிடையே, ஒரு சில கடைகளை அகற்றுவதில் மட்டும் அதிகாரிகள் பாகுபாடு காட்டுவதாக பொதுமக்கள், சிறு வணிகர்கள் குற்றம்சாட்டினர்.