உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி ஸ்ரீராமர் ஜென்ம பூமி கோயிலின் அடிக்கல் நாட்டு விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தீவிரமாக செய்துவருகிறது.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் இந்து அமைப்பினர் முக்கிய ஸ்தலங்களில் இருந்து புனிதநீர், காவிரி ஆற்றின் மணல் ஆகியவற்றை சிறப்பு பூஜை செய்து அயோத்திக்கு அனுப்பி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, திருவாரூர் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கமலாலய புனிதநீர், அரசலாற்று மணல் ஆகியவற்றை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 1) மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கமலாலய குளத்தின் புனித நீர், அரசலாற்று மணல் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தியாகராஜர் கோயிலை சுற்றி ஊர்வலமாக வந்தனர். பின்னர் புனித நீரையும் மண்ணையும் தியாகராஜர் சுவாமி முன்பு வைத்து வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை செய்து அதனை விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் விரைவு அஞ்சல் மூலமாக அயோத்திக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: அயோத்தி பூமிபூஜை : நேரம் கணித்த வேத விற்பன்னர் விஜயேந்திர சர்மாவின் பிரத்யேக பேட்டி !