தமிழ்நாடு முழுவதும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக பழைய பேருந்து நிலையம் முழுவதும் சாக்கடை நீருடன் மழைநீரும் கலந்து குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துடன் கடந்துசெல்கின்றனர்.
மேலும் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்துள்ளதால் பொதுமக்களும், பாதசாரிகளும் மூக்கைப் பிடித்துக்கொண்டு கடந்துசெல்கின்றனர்.
நகராட்சி நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்கு: பேருந்து நிலையத்தில் குளமாக மாறியுள்ள சாக்கடை நீர்! - Sewage water at Old Bus Stop at Tiruvarur
திருவாரூர்: பழைய பேருந்து நிலையத்தில் சாக்கடையுடன் மழைநீரும் சேர்ந்து புகுந்து குளமாக மாறியுள்ளதால், பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
![நகராட்சி நிர்வாகத்தினரின் அலட்சியப்போக்கு: பேருந்து நிலையத்தில் குளமாக மாறியுள்ள சாக்கடை நீர்! Rain and Sewage](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10140057-631-10140057-1609933178969.jpg?imwidth=3840)