ETV Bharat / state

பாஜகவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் கவலைப்பட மாட்டார் - நாராயணசாமி - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

திருவாரூர்: பாஜகவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் கவலைப்பட மாட்டார் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

puthuchery narayanasamy
puthuchery narayanasamy
author img

By

Published : Feb 7, 2020, 7:40 AM IST

காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்லத் திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திருவாரூர் சென்றார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், இந்திய நாட்டில் அமைதி சீர்குலைந்து இருப்பதை பற்றி பாஜக கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் பிரதமர் மோடி, அமித் ஷாவின் குரலாக பேசி வருகிறார்.

மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைக்கும் பாஜகவுக்கு நடிகர் ரஜினிகாந்த் துணை போகிறார். இதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பாஜகவின் அங்கமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பாஜக அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அமலாக்கப்பிரிவு, புலனாய்வுத்துறை, வருமானவரித் துறை போன்றவற்றை ஏவி தொல்லை கொடுப்பது பாஜகவின் பாரம்பரிய வழக்கம். அதன் அடிப்படையில் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. இது அவரை மிரட்டி பாஜகவுக்கு ஆதரவாக நடக்க வைக்கும் முயற்சி. ஆனால், வருமான வரிசோதனைக்கு நடிகர் விஜய் கவலைப்பட மாட்டார் என்றார்.

இதையும் படிங்க: கட்டதுரைக்கு இதே வேலையா போச்சு... விஜய்யை வம்பிழுக்கும் ஹெச். ராஜா

Intro:

Body:பாரதிய ஜனதாவின் மிரட்டலுக்கு நடிகர் விஜய் கவலைப்படவும் மாட்டார், மசியவும் மாட்டார் என திருவாரூரில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி.

திருவாரூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவிற்கு வந்திருந்த புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது,

இந்திய நாட்டில் அமைதி குலைந்திதிருப்பதை பற்றி பாஜக கவலைப்படவில்லை. நடிகர் ரஜினிகாந்த் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவின் குரலாக பேசி வருகிறார். மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க நினைக்கும் பாரதிய ஜனதாவிற்கு நடிகர் ரஜினிகாந்த் துணை போகிறார். இதிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் பாரதிய ஜனதாவின் அங்கமாக செயல்படுகிறார் என்பது தெரிகிறது.

பாஜக அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது அமலாக்கப்பிரிவு, புலனாய்வுத்துறை, வருமானவரித் துறையை போன்றவற்றை ஏவி தொல்லை கொடுப்பது பாரதிய ஜனதாவின் பாரம்பரிய வழக்கம். இது பல மாநிலங்களில் நடைபெற்று வருகின்றது. அந்த அடிப்படையில் தான் நடிகர் விஜய் வீட்டில் வருமானவரி சோதனை நடந்தது. அதேபோல நடிகர் விஜய்யை மிரட்டி பாரதிய ஜனதா-விற்கு ஆதரவாக நடக்க வைக்கும் முயற்சி தான் இது. ஆனால் நடிகர் விஜய் இந்த வருமான வரிசோதனைக்கு கவலைப்படவும் மாட்டார், மசியவும்மாட்டார் என தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.