திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கரோனா தடையால் வேலை இழந்து வாடும் மாற்று திறனாளிகளுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது. இதற்கு வேளாண் துறை உதவி இயக்குனர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். அதன் பின்னர் காவல் ஆய்வாளர் அன்பழகன் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசி, காய்கறி, மளிகை பொருள்களை வழங்கினார்.
அப்போது அவர் பொது மக்களிடம், தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும், சத்தான உணவை உண்ண வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வில் நெல் ஜெயராமன், பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், சமூக செயற்பாட்டாளர் பாலம் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் சங்க தலைவர் ஜெகதீசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் டாஸ்மாக் விலை உயர்வு...