திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள நல்லாமாங்குடியில் டாக்டர். செந்தில் அறக்கட்டளை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் திருவாரூர் சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன் கலந்துகொண்டார்.
இதனையடுத்து நன்னிலத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.
இதையும் படிக்க... வயல்வெளியில் உல்லாசம்: காட்டுப்பன்றி எனச் சுட்டதால் காதலன் பலி!