உலக பிரசித்திப்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயிலில் கமலாம்பாள் சன்னிதி அமைந்துள்ளது. அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறும் ஆடிப்பூர பெருவிழாவானது கடந்த ஜூலை 25ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கமலாம்பாள் திருத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேரானது நான்கு வீதிகள் சுற்றி நிலையடியை வந்தபோது தேரின் மேல் பகுதியிலிருந்த அர்ச்சகர் முரளி (56) நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயமடைந்தார்.
இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் உள்ள வேறு தனியார் மருத்துமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.