நன்னிலம் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாதர் திருக்கோயிலில் மாசி மக விழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைப்பெற்று வரும் நிலையில் முக்கிய நாளான இன்று (பிப் 27) காலை அருள்மிகு நடராஜர் சிவகாமி அம்மனுடன் வீதியுலா வந்து, குப்த கங்கை தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து ஸ்ரீ வாஞ்சிநாதர், ஸ்ரீ மங்களாம்பிகை, விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாதாரனை நடைபெற்றது. பின்னர் வாஞ்சிநாதர் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகளில் வலம் வந்தபின் குப்த கங்கை தீர்த்த குளத்தில் அஷ்ர தேவர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, தீர்த்தவாரியும் நடைபெற்றது.
இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு குப்த கங்கையில் புனித நீராடினர். நாட்டில் எங்கும் இல்லாத வகையில் ஸ்ரீ எமதர்மராஜா சித்திர குப்தர் தனி சன்னதியில் ஸ்ரீவாஞ்சிநாதர் கோயிலில் எழுந்தருளி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: குடவாசல் உபரிநீர் திட்டத்தைக் கைவிடுங்கள் - கறுப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!