ETV Bharat / state

மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் - பி.ஆர்.பாண்டியன் - tamil latest news

திருவாரூர்: மேட்டூர் அணை உபரிநீர் திட்டத்திற்க்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பி.ஆர். பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பி.ஆர்.பாண்டியன்
பி.ஆர்.பாண்டியன்
author img

By

Published : May 26, 2020, 10:22 PM IST

தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் இன்று (மே 26) மன்னார்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதுவது;

காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. சுமார் 50 லட்சம் மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. தமிழ்நாடு உணவு தேவையில் சுமார் 40 விழுக்காடு டெல்டாவில் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் 11 மாநகராட்சிகள் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் வாழக்கூடிய ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. காவிரி உரிமைக்காக 50 ஆண்டு காலம் போராடி பெற்ற உரிமையை குழி தோண்டி புதைக்கும் வகையில் தமிழ்நாடு பொதுப்பணித் துறை மேட்டூர் உபரி நீர் திட்டம் என்ற பேரில் சட்டவிரோதமாக நான்கு புதிய நீர் பாசன திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

மேட்டூர் அணை முதல் கிருஷ்ணராஜ சாகர் வரை கர்நாடகமோ, தமிழ்நாடோ புதிய நீர் பாசன திட்டங்களை செயல்படுத்தக் கூடாது. காவிரி சம்பந்தப்பட்ட அனைத்து அணைகளின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதால் எதுவாக இருந்தாலும் ஆணையத்தின் அனுமதி பெற வேண்டும். கீழ்பாசன விவசாயிகள் கருத்தைக் கேட்காமல் காவிரி மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்க முடியாது.

இதன் மூலம் காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்பை மீறும் வகையில் அவமதிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசே ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக கர்நாடகம் மேகேதாட்டு அணை கட்டும் நடவடிக்கைக்கு தமிழ்நாடு அரசு மறைமுகமாக துணை போகிறதோ? என அஞ்ச தோன்றுகிறது. குடிநீர் திட்டம் என்ற பெயரில் மேட்டூர் அணையிலிருந்து இறவை பாசன தண்ணீரை எடப்பாடி தொகுதி உள்பட சேலம் மாவட்டத்திற்கு நீரேற்று திட்டம் (பம்பிங் ஸ்கீம்) மூலம் பெரும் பகுதியான நீரை கொண்டு செல்ல உள்ளனர். அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

இப்பணி நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா அழிந்து போகும். விவசாயம் பேரழிவை சந்திக்கும், ஐந்து கோடி மக்களின் குடிநீர் பறிபோகும், டெல்டா விவசாயிகள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்து போகும். எனவே டெல்டா விவசாயிகள் நலன் கருதி மேட்டூர் உபரிநீர் திட்டத்தை கைவிட முதலமைச்சர் முன்வர வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையம் இதனை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் விரைவில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஆச்சி என்னும் திரையுலக ஆளுமை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.